கடந்த 10 வரு­டங்­களில் விபத்­துக்­க­ளினால் 27,000 பேர் பலி!

கடந்த பத்­து­ வ­ரு­டங்­களில் 27ஆயி­ரத்து 161பேர் வீதி விபத்­துக்­களில் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இது முப்­ப­து­வ­ருட யுத்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நிக­ரா­ன­தாகும் என எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று போக்­கு­வ­ரத்து விதி முறைகள் தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

சார­தி­களின் கவ­ன­யீ­ன­மான நட­வ­டிக்கை கார­ண­மாக கடந்த பத்து வரு­டங்­களில் 27ஆயி­ரத்தி 161பேர் உயி­ரி­ழந்­தி­ருக்­கின்­றனர்.

இந்த உயி­ரி­ழப்­பா­னது கடந்த காலங்­களில் நாட்டில் ஏற்­பட்ட யுத்­தத்­தின்­போது உயி­ரி­ழந்­த­வர்­களின் தொகைக்கு நிக­ரா­னது என்றே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

போதை­யுடன் வாக­னங்­களை ஓட்­டு­வதால் சார­தி­க­ளை­விட பாத­சா­ரி­களே அதிகம் விபத்­துக்­களில் உயி­ரி­ழந்­தி­ருக்­கின்­றனர். இதனை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே போக்­கு­வ­ரத்து சட்­டத்தை மீறு­வோ­ருக்­கான தண்­டப்­ப­ணத்தை 25ஆயிரம் ரூபா­வரை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

நான் இந்த அமைச்­சுக்கு பொறுப்­பாக இருக்­கும்­போதே இந்த சட்­டத்தை மேற்­கொள்ள நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டேன். என்­றாலும் தற்­போது அதனை நிறை­வேற்றி இருப்­ப­தை­யிட்டு போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ருக்கு நன்­றி­களை தெரி­விக்­கின்றேன்.

அத்­துடன் சார­திகள் கைய­டக்க தொலை­பே­சியை பயன்­ப­டுத்­திக்­கொண்டு வாக­னங்­களை ஓட்­டு­கின்­றனர். அதனை கருத்­திற்­கொண்டே குறித்த சட்­டத்தில் கைய­டக்க தொலை பேசி பாவனை தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாக தெரி­வித்­தி­ருப்­பது காலத்­துக்கு தேவை­யான சட்­ட­மா­கவே காண்­கின்றேன்.

2017இல் ரயில் பாதை­களில் செல்பி எடுக்­கச்­சென்­றதில் 24 இளை­ஞர்கள் உயி­ரி­ழந்­தி­ருக்­கின்­றனர். அத­போன்று புகை­யி­ரத குறுக்கு வீதி­களில் வாக­னங்கள் ரயிலில் மோதி­யதில் 86 விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ளன.

ரயில் பாது­காப்பு கட­வை­களில் சமிக்­ஞை­களை பொருட்­ப­டுத்­தாமல் செயற்­பட்­டதால் 439 விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ளன.

மேலும் புகை­யி­ரத பாதைக்கு குறுக்­காக சென்­ற­மையால் 196 விபத்­துக்­களும் புகை­யி­ரத பாதையில் பய­ணிப்­பதன் மூலம் 231 விபத்­துக்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

அதனால் சார­திகள் மாத்­தி­ர­மல்ல பாத­சா­ரி­களும் கவ­ன­யீ­மற்று செல்­கின்­ற­தாலே இந்த விபத்­துக்கள் இடம்­பெற்­றுள்­ளன.

வீதி விபத்­துக்கு தண்­ட­னையை அதி­க­ரிப்­பது மாத்­தி­ர­மன்றி விபத்­துக்­களை குறைப்­ப­து­தொ­டர்­பாக வெளி­நா­டு­க­ளுடன் இணைந்து இதனை ஒழுங்­கு­றுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும்.

அதா­வது சாரி­தி­க­ளுக்கு புள்­ளி­வ­ழங்கும் முறை ஒன்றை ஏற்­ப­டுத்தி விபத்­துக்கள் இடம்­பெறும் பட்­சத்தில் புள்­ளி­களை குறைத்து, இறு­தியில் அவ­ரது சாரதி அனு­மதி பத்­தி­ரத்தை நீக்கும் வேலைத்­திட்­டத்தை நான் ஆரம்­பித்­தி­ருந்தேன்.

இந்த முறை அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களில் இருந்து வரு­கின்­றது. இதற்கு பாது­காப்பு துறையின் ஒத்­து­ழைப்பும் தேவை­யாகும்.

சாரதி அனு­மதி பத்­திரம் விநி­யோ­கிக்­கும்­போது முறை­யான கொள்­கையில் வழங்­கு­கின்­றதா என்ற சந்­தேகம் இருக்­கின்­றது. சாரதி அனு­மதி பத்­திரம் வழங்­கு­வதை மோட்டார் வாகன பதிவு திணைக்­க­ளத்­துக்கு மாத்­திரம் வழங்­காமல் வேறு நிறு­வ­னங்­க­ளையும் இதில் இணைக்­க­வேண்டும்.

அதன் மூலம் அந்த திணைக்களத்தின் ஏகாதிபத்தியத்தை இல்லாமலாக்கலாம். இல்லாவிட்டால் லஞ்சம் பெற்றுக்கொண்டு சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நிலைமைகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

அதனால் சாரதி அனுமதி பத்திரத்தை வழங்கும் உரிமையை மோட்டார் வாகன பதிவு தினைணக்களத்துடன் போக்குவரத்து திணைக்களத்துக்கும் வழங்கவேண்டும் என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net