உலகின் உய­ர­மான முதல் கிட்டார் ஹோட்டல்.

அமெ­ரிக்­காவில் இன்னும் கட்­டி­மு­டிக்­கப்­ப­டாத உலகின் உயரமான முதல் கிட்டார் ஹோட்­டலின் கட்­டட அமைப்பும் அது பற்றிய தகவல்களும் வெளி­யா­கி­யுள்­ளன.

அமெ­ரிக்­காவின் ஃப்ளோரி­டாவின்ஹொலிவூட் சிட்­டியில் திறக்கப்ப­ட­வுள்ள இந்த ஹோட்டல் மொத்தம் 450 அடியில் கட்டப்படவிருக்கிறது.

இதுதான் மிக உய­ர­மான ஹோட்டல் என்கிற பெய­ரையும் வர­லாற்றில் பதிக்­க­வுள்­ளது.

இதில் தங்­கு­வ­தற்கு வச­தி­யாக 515 சதுர அடியில் விசா­ல­மான அறை­களும் கட்­டப்­ப­ட­வுள்­ளன. அங்கு 10 ஏக்­கரில் லாங்கூன் ஸ்டைலில் பிர­மாண்ட நீச்சல் தடா­கத்­தையும் அமைக்­க­வுள்­ளனர்.

12,000 சதுர அடியில் மதுபான சாலைகள்,கடைகள் 41,000 சதுர அடியில் கால்­க­ளுக்­கான ஸ்பா, நகைச்­சுவை திரை­யரங்கு, 14 விடுதிகள் 228 சூதாட்ட விளை­யாட்­டுகள் என மக்­களை முழுக்க முழுக்க மகிழ்ச்­சியில் மூழ்­க­டிக்கச் செய்யும் விட­யங்கள் நிறைந்­த­தாக இந்த ஹோட்டல் இருக்கப் ­போ­கி­றது.

சுற்­றுலாத் தளத்­திலும் முக்­கிய இடத்தைப் பிடிக்­கப்­போ­கின்­றது.

மேலும் இசைப் பிரி­யர்­களைக் கவரும் வித­மாக 7000 பேர் அமரும் வகையில் அரங்கு ஒன்று உரு­வா­க­வுள்­ளது.

எதிர்­வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி இவ் ஹோட்டலின் திறப்பு விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net