‘NGK’ – 10 நாட்களின் வசூல்  விபரம்.

‘NGK’ – 10 நாட்களின் வசூல்  விபரம்.

சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படம் தமிழ் சினிமா இரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படமாகும்.

எனினும், 10 நாட்களுக்கு முன்னர் வெளியாகிய இப்படம் மோசமாக உள்ளதாக இரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

இப்படம் வெளிவந்து 10 நாட்களில் தமிழகத்தில் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளது. அத்துடன் ஆந்திரா, தெலுங்கானாவில் ரூ.8 கோடியும் கேரளாவில் ரூ.1.6 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.5 கோடியும் வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் மொத்தமாக இப்படம் ரூ.50 கோடி வரை தான் 10 நாட்களில் வசூல் வந்துள்ளதாம்.

இது சூர்யாவின் திரைப் பயணத்தில் சமீபத்தில் வந்த படங்களில் மிக குறைந்த வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net