அச்சத்தை அகற்றிய மோடியின் விஜயம்!

பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து இலங்கையின் பாதுகாப்பு குறித்து வெளிநாடுகளிடையே அச்ச நிலை ஏற்பட்டிருந்தது.

ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் ஏனைய நாடுகளின் மத்தியில் இருந்த பாதுகாப்பு அச்ச இல்லாமல் செய்ப்பட்டுள்ளது என்று மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் எங்களின் வேட்பாளர் தொடர்பில் இன்னும் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்பட வில்லை. ஆனால் உரிய நேரத்தில் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ரேங் இன்டர் நெசனல் நிறுவனத்தின் கிளையொன்றினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் கொழும்பில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net