அபிவிருத்தி ஒரு பிரிவினருக்கு மட்டுமானதல்ல!

அபிவிருத்தி திட்டங்கள் என்பது ஒரே ஒரு இனம் அல்லது மதத்திற்கு உரித்தானதல்ல என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டை ஒன்றிணைக்க அனைத்து மதங்களும் இனங்களும் இணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தவகையில் பருத்தித்துறையில் இருந்து மாத்தறை வரை பல்வேறு மத நடைமுறைகளை கடைபிடிக்கும் அனைவரும் ஒரு புதிய நாட்டை அமைப்பதற்கு ஐக்கியப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அத்தோடு மிகப்பெரிய கிராமிய அபிவிருத்தித் திட்டம் தற்போது நாட்டில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net