அநுராதபுத்தில் ஒரு வாரத்துக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு.

அநுராதபுத்தில் ஒரு வாரத்துக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு.

பொசொன் போயா தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை முதல் ஒருவார காலத்திற்கு மூடப்படும் என்று கலால் திணைக்களம் கூறியுள்ளது.

அதன்படி நாளை முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என்றும் அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க கூறினார்.

இது தவிர பொசொன் போயா தினமாக எதிர்வரும் 16ம் திகதி நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட உள்ளது.

அதேநேரம் இன்று முதல் எதிர்வரும் 18ம் திகதி வரை பொசொன் வாரமாக அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net