இளைஞர்களை கவர்வதற்கு இரவு நேர களியாட்ட விடுதிகள் தேவை.

இந்திய இளைஞர்களை அதிகளவாக கவர வேண்டுமாயின் இரவு நேர களியாட்ட விடுதிகள் தேவை என சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியர்களின் வருகை முக்கியம் எனவும் அவர்கள் தொடர்ந்தும் வருவார்களாயின் நாங்கள் யாரையும் நம்பி இருக்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (12) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கெசினோக்கள் மிகவும் கவர்ச்சியானவை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net