மன்னாரில் கடும் வரட்சி; 62,823 பேர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக 17 ஆயிரத்து984 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரத்து 823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான வரட்சி காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள குளங்கள் மற்றும் வாய்க்கால்,நீர்நிலைகளெனஅனைத்தும் வற்றிப் போயுள்ளன.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தின் 05பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 104 கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளதாக,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் கனக ரெட்ணம் திலீபன் தெரிவித்தார்.

அத்தோடு, மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பமான காலநிலை நிலவுவதால்மன்னார், மடு, மாந்தை , முசலி , நானாட்டான் ஆகிய 05 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக,நானாட்டான் மற்றும் முசலி பிரதேசங்களை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குளங்கள் அனைத்தும் வற்றிக்காணப்படுவதனால் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் பெரும்பாலான மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் வெப்பம் காரணமாக வரண்டு காணப்படுவதனால் ஒழுங்கான மேய்ச்சல் நிலங்கள் இன்றி கால்நடைகளும் இறந்து போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிவாரண பிரிவினரால் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 12 பௌசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.குறிப்பாக 8 ஆயிரத்து860 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 280 பேருக்குகுடிநீர் விநியோகிக்கப்படுவதோடு, நாளொன்றுக்கு சுமார் 1 இலட்சத்து 45 ஆயிரம் லீற்றர்குடிநீர் விநியோகிக்கப்படுவதாக, அவர் தெரிவித்தார்.

மேலும், வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளமக்களுக்கு வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு கோரிக்கை விடுத்துமன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net