ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார்.

ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார் !

கொரோனா வைரஸ் பெருந்தொற்று மானிடசமூகத்தினை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள இக்கட்டான இத்தருணத்தில், ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிர்பிரிந்தார் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுச் சென்றார் என்ற துயரமான செய்தியினை அறியத்தருகின்றோம்.

கடந்த சில நாட்களாக மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐயா அவர்கள், இன்று மதியம் 14மணியளவில் உயிர்பிரித்தார் என்ற செய்தி மருத்துமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியவதிலும் தன்னை இளைஞராக மனங்கொண்டு உறுதியுடனும், துடிப்புடனும் நமக்கெல்லாம் வழிகாட்டி நின்ற மூத்தமரம் சாய்ந்தது கண்டு அனைவரும் ஆறாப்பெருந்துயரில் நிற்கின்றறோம்.

அன்னாரின் இழப்பினால் துயருற்றிகருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தோழமையோடு நாம் அனைவரும் துனை நிற்போம்.

நன்றி
LIFT
ஈழத்தமிழர் திரைப்பட சங்கம்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net