இணையத்தில் வெளியான “ஏணை”முழு நீளத்திரைப்படம்.

புலம்பெயர்த்த மண்ணில் இருத்து நூறு வீதம் மன நிறைவான ஒரு முழு நீள சினிமா ஏணை ..

புலம்பெயர் வாழ்வை அச்சு பிசகாமல் நேர்த்தியாக மிக மிக யதார்த்தமாக அழகாக திரையில் பேசும் ஒரு படைப்பை பிரன்சு மண்ணில் நேற்று பார்த்த சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சி..

ஈழ சினிமாவில் ஏணை இயக்குனர் அஜந்தன் தன்னை தவிர்த்து இனி ஈழ சினிமா இல்லை என்னும் ஒரு செய்தியை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்…

ஈழத்துக்கும் புலத்துக்குமான தொடர்பு உறவுகளின் பிணைப்பு என்பது என்ன என ஒரு காட்சியில் இவ்வளவு ஆழமாக சொல்லி விட முடியுமா என பிரமிக்க வைக்கிறது…

படதில் வரும் பாடல்கள் அட டா அற்புதம் காட்சியும் பாடலும் பேசப்படும் கண்டிப்பாக..

மொழி,நடை உடை பாவனை என ஈழ தமிழர் வாழ்வை அப்படியே அள்ளி எடுத்து ஏணையில் போட்டு தாலாட்டி விட்டிருக்கும் இயக்குனர் சக நடிகர்கள் படக்குழுவிற்கு மனம் நிறைத்த வாழ்த்துகள்.

https://youtu.be/TJRiPdHkpwM

#ஏணை சுகமா தாலாட்டு 💐

 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net