வெளியே நடமாட மூன்று வித படிவங்கள்.

வெளியே நடமாட மூன்று வித படிவங்கள் பிரான்ஸ்.

பொது முடக்க காலப்பகுதியில் அவசர தேவைகளுக்கு வெளியே நடமாடுவதற்கான அனுமதிப் படிவங்களை உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

வழமை போன்று டிஜிட்டல் சாதனங்களில் தரவிறக்கம் செய்யக்கூடியவாறும் அச்சுப் பிரதி எடுத்து கையால் எழுதி பூரணப்படுத்திக் கொள்ளக் கூடிய வடிவத்திலும் படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

வெளியே நடமாடவேண்டிய தேவை என்ன என்பதைக் குறியிட்டுப் பூர்த்தி செய்து தம்முடன் கொண்டு செல்லவேண்டிய பொதுவான படிவத்துடன் வேறு இரண்டு தனித்தனியான படிவங்களும் இம்முறை வெளியிடப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வோர் மற்றும் வீட்டில் இருந்து தொழில் இடத்துக்குச் செல்ல வேண்டிய தேவையுடையோருக்கே அந்த இரண்டு தனியான படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அவை இரண்டையும் ஒருதடவை பூர்த்திசெய்தால் போதுமானதாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பாடசாலை செல்வோரும் தொழில்களுக்குச் செல்வோரும் ஒரு தடவை பூர்த்தி செய்த படிவத்தை பொது முடக்க காலப்பகுதி முழுவதும் பயன்படுத்த முடியும்.

இவ்விரு தேவைகள் தவிர்ந்த ஏனைய அவசர தேவைகளுக்காக அவ்வப்போது வெளியே செல்ல வேண்டியோர் முன்னர் போலவே ஒவ்வொரு தடவையும் தனித்தனி படிவத்தை பூர்த்தி செய்து தம்மோடு எடுத்துச் செல்ல வேண்டும்

பொதுவான தேவைக்குரிய மாதிரிப்படிவத்தையும், தனித்தனியே தொழில் மற்றும் பாடசாலைத் தேவைகளுக்குரிய மாதிரிப் படிவங்களையும் கீழே படங்களில் காணலாம்.

29-10-2020

வியாழக்கிழமை.

Copyright © 7007 Mukadu · All rights reserved · designed by Speed IT net