சீனாவின் ரோபோ ஆய்வு ஊர்தி செவ்வாயில் தரையிறங்கியது !

சீனாவின் ரோபோ ஆய்வு ஊர்தி
செவ்வாயில் தரையிறங்கியது !
விண்ணிலும் பூகோளப் போட்டி

தற்போது செவ்வாயில் அமெரி்க்கா தனித்து இல்லை. போட்டிக்கு சீனாவும் கூடவே நிற்கிறது.

சீனா அதன் அறிவியல் சாதனைகளில் ஒரு மைல் கல்லாக தானியங்கி ரோபோ
விண்கலம் ஒன்றை செவ்வாய்க் கிரகத்
தில் தரையிறக்கி உள்ளது. அமெரிக்கா வைத் தொடர்ந்து செவ்வாயில் தண்ணீர்
மற்றும் உயிரியல் தடயங்களை ஆய்வு செய்யும் வசதிகளுடன் கூடிய நவீன
விண்கலத்தை செவ்வாயில் தரையிறக்
கிய இரண்டாவது நாடு சீனா ஆகும்.

“ஜுராங்” (Zhurong) எனப் பெயரிடப்பட்ட தானியங்கி ரோபோ விண்கலம் இன்று
சனிக்கிழமை சீன நேரப்படி காலையில் (1:10 am Paris time) செவ்வாய்க் கிரகத் தின் வடபகுதி மேற்பரப்பில் வெற்றிக ரமாகத் தரையிறங்கியது என்னும் தகவலை சீனாவின் தேசிய விண்வெளி
நிர்வாக மையம் (National Space Adminis tration-CNSA) உறுதிப்படுத்தி உள்ளது.

சீனப் புராணக் கதைகளில் “ஜுராங்”
என்பது நெருப்புக் கடவுளின் பெயரைக்
குறிக்கிறது. சுமார் இருநூறு கிலோ எடை கொண்ட – சக்கரங்களில் நகரக் கூடிய – அந்த ரோபோ ஊர்தி நாசாவின்
பேர்சிவரன்ஸ்(Perseverance) விண்கலத் தைப் போன்றே நவீன கமெராக்கள் உட்பட பல ஆய்வுக் கருவிகளையும் பரிசோதனை வசதிகளையும் கொண்டது ஆகும்.அதன் லேஸர் வசதிகள் பாறைகளை துளைத்து ஆய்வு செய்து
பண்டைய உயிர்ச் சுவடுகளைக் கண்டறிய உதவும். தரையில் தண்ணீர்,
பனிக்கட்டிப் படிமங்களையும் ஆய்வு
செய்யும்.

“ஜுராங்” ரோபோ ஊர்தி சீனாவின்
“தியான்வென் -1″(Tianwen-1) என்ற விண்
வெளி ஓடத்துடன் இணைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூலையில் விண்வெளி க்குச் செலுத்தப்பட்டது. “தியான்வென் -1”
விண்வெளி ஓடம் அதனை செவ்வாயின்
வளிமண்டலத்தில் தனியாகப் பிரித்து
தரையிறக்கியது.

இருநூறு மில்லியன் கிலோ மீற்றர்கள்
தொலைவில் உள்ள செவ்வாயில் இருந்து ரோபோ ஊர்தி தனது முதல்
சமிக்ஞையை பூமிக்கு அனுப்பிவைக்க
17 நிமிடங்கள் பிடித்தன என்று சீன
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாயில் விண்கலம் ஒன்றை ஆராய்ச்சிக்காக இறக்கியுள்ள முதல்
ஆசிய நாடு சீனா ஆகும். 2011 இல் அது ரஷ்யாவுடன் இணைந்து செயற்கை
கோள் ஒன்றை செவ்வாய்க்கு அனுப்ப முயன்றது. ஆனால் அது தோல்வியில்
முடிந்தது. எனினும் தொடர்ந்தும் பல முயற்சிகளை சீனா முன்னெடுத்து வந்தது.

சீனா மற்றும் அமெரிக்கா என்பவற்றுக்கு
முன்னராக ஐரோப்பிய நாடுகளின் விஞ்ஞானிகள் செவ்வாயில் விண்கலம் ஒன்றைத் தரையிறக்க ரஷ்யாவுடன் இணைந்து மேற்கொண்ட இரு முயற் சிகள் தோல்வி கண்டன.

விண்வெளி ஆராய்ச்சித் துறையில்
அமெரிக்கா, ஜரோப்பா, ரஷ்யா ஆகிய
தரப்புகளுடன் சேர்ந்து இயங்காமல்
தனக்கெனத் தனியான விண்வெளி
நிர்வாக நிலையம் ஒன்றைக் கட்டி யெழுப்புவதில் சீனா வெற்றி கண்டு ள்ளது.

சீனா விண்வெளியில் தனது மையம் ஒன்றை நிறுவும் திட்டத்தின் தொடக் கமாக அனுப்பிய கலங்களில் ஒன்றின் பெரிய பாகம் ஒன்று செயலிழந்து கடந்த
வாரம் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்தது
தெரிந்ததே.

குமாரதாஸன். பாரிஸ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net