பிரபல பிரெஞ்சு யூரியூப் கலைஞர்கள்
எலிஸேயில் மக்ரோனுடன் காணொலி
பத்து லட்சம் பார்வைகளை எட்டுமா?
பிரான்ஸின் பிரபல யூரியூப் கலைஞர்
களான இரட்டையர்கள் மக்பிளை- கார் லிட்டோ (McFly et Carlito) இருவரும்
அதிபர் எமானுவல் மக்ரோனுடன்
இணைந்து அதிபர் மாளிகையில் பட மாக்கிய யூரியூப்(YouTube) காணொலி வெளியாகி இருக்கிறது.
இன்று ஞாயிறு காலை பத்து மணிக்கு
இணையத்தில் வெளியாகிய காணொலி
அரைமணி நேர இடைவெளிக்குள் 50 ஆயிரத்துக்கு மேல் பார்வையிடப்பட்டது.
நாட்டின் அதிபருடன் இரட்டைக் கலைஞர்
கள் நடத்திவருகின்ற காணொலிப் போட்
டியில் இது இரண்டாவது வீடியோ ஆகும்.
அதிபர் மக்ரோனின் வேண்டுகோளின் பேரில் கொரோனா வைரஸ் தொடர்பாக நாட்டு மக்களை விழிப்பூட்டுகின்ற முதல் காணொலிப் பதிவை இரட்டையர்கள் இருவரும் கடந்த பெப்ரவரியில் வெளியிட்டிருந்தனர். சமூக இடைவெளி யைப் பேணுவதை வலியுறுத்தும் விதமான அந்தக் காணொலி 10 லட்சம்
பார்வைகளை எட்டிச் சாதனை படைத் தால் தங்கள் அடுத்த காணொலியை எலிஸே மாளிகையில் மக்ரோனுடன் இணைந்து படமாக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் பந்தையம் கட்டியிருந்தனர். அந்த முதல் காணொலி சில தினங்களுக்குள்ளாகவே பத்து லட்சத்துக்கும் அதிக பார்வைகளைப் பெற்றுப் பெரும் சாதனை படைத்தது.
பந்தயத்தின் இரண்டாவது கட்டம் இப்போது. இதுவும் பத்து லட்சம் பார்வைகளைத் தாண்டுமாயின் அடுத்த
பல கட்டங்களும் காத்திருக்கின்றன.
அதிபரின் செல்வாக்கை நிரூபிக்கும்
விதமான இந்த இரண்டாவது போட்டியில்
அதிகமான பார்வைகளை எட்டி அவர் வெற்றி பெற்றால், மக்பிளை – கார்லிட்டோ இருவருக்கும் ஒரு வெகுமதி
காத்திருக்கிறது.
வரவிருக்கும் ஜூலை 14 ஆம் திகதி
நாட்டின் சுதந்திரதின நிகழ்வின் போது
சாகஸ அணிவகுப்பில்(Patrouille de France aircraft) ஈடுபடும் போர் விமானம் ஒன்றில் அவர்கள் இருவரும் ஏறிப்பறக்க முடியும்.
அதிபர் மக்ரோனும் அவரது அரசாங்கமும்
தங்கள் கொள்கை முன்னெடுப்புகளை
பிரபல சமூகவலைத்தளங்கள் ஊடாக
மேற்கொண்டு வருவதைக் காணமுடிகி
றது. புதிய தலைமுறையினருக்கு செய்
திகளைச் சொல்வதற்கு யூரியூப், ரிக்ரொக், ருவிச் போன்ற- இளையோ ரைக் கவர்ந்த – பிரபல சமூகவலைத் தளங்களை அரசுத் தலைவர்கள் பயன் படுத்திவருகின்றனர்.
(எலிஸேயில் கடந்த செவ்வாயன்று பட
மாக்கப்பட்ட காணொலியின் இணைப்பு
கீழே comment பகுதியில்)