சென் நதியில் மிதவைப் படகுகளில் பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா.

சென் நதியில் மிதவைப் படகுகளில்
பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா

தனித்துவம் மிக்க புரட்சி நிகழ்வாக
ஏற்பாடாகும் என்கிறார் மக்ரோன்

2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்
விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பாரிஸ் நகரில் சென் நதியின் மீது மிதவைப் படகுகளிலும் அதன் கரைகளி லும் நடத்தப்படவுள்ளது.தனித்துவமான தும் – நினைவில் நிலைக்கக் கூடியது மான-ஒர் உணர்வுபூர்வ நிகழ்வாக அது ஏற்பாடு செய்யப்படும்.

அதிபர் மக்ரோன் இவ்வாறு தெரித்திருக்
கிறார்.ரோக்கியோவில் ஆரம்பமாகி
யுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றிருந்த அவர் அதன் பின்னர் பிரான்ஸின்
பிரபல விளையாட்டுச் செய்திப் பத்திரி
கையான L’Equipe ஊடகத்துக்கு செவ்வி
அளித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின்
தலைவர் ரொனி எஸ்ராங்கே (Tony Estanguet) அவர்களின் எண்ணத்தில்
உருவாகிய இந்த இடத் தெரிவை அதிபர்
மக்ரோன் உறுதிப்படுத்தியுள்ளார் என்று
L’Equipe பத்திரிகை தெரிவித்துள்ளது.

சென் நதியில் ஆரம்ப விழாவை நடத்தும்
யோசனையை ரொனி எஸ்ராங்கே முதன்
முறையாக முன்வைத்த போது அதனைத்
தான் ஒப்புக்கொள்ளவில்லை என்ற தகவலை வெளியிட்ட மக்ரோன்,
மக்களைச் சென்றடையும் விதமாக-
திறந்த வெளியில் அதனை நடத்துவது
தனித்துவமாகவும் புரட்சிகரமாகவும்
அமையும் என்பதைப் பின்னர் உணர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

உலக மக்களுக்கான ஒர் உன்னதம்
மிக்க இலவச காட்சியாக தொடக்கவிழா
சென் நதியில் பல லட்சம் பேர் முன்னி
லையில் நடத்தப்படும். பார்வைச் செறி
வும், உணர்வும் நிறைந்த ஒரு மறக்கமுடி
யாத நிகழ்வை பல காட்சிகள், இடங்கள்
இசைகள் கலந்து வழங்கக் கூடிய
வல்லமை ஏங்களிடம் உண்டு – என்று
அதிபர் மக்ரோன் மேலும் தெரிவித்திருக்
கிறார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின்
தொடக்க விழா 2024 ஆம் ஆண்டு ஜூலை
26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

குமாரதாஸன்.
பாரிஸ்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net