இலங்கை மக்களுக்கு இது மிக சவாலான காலம்! – ஐ.ஒன்றியம்

இலங்கை மக்களுக்கு இது மிக
சவாலான காலம்! – ஐ.ஒன்றியம்

மக்கள் ஆர்ப்பாட்டம் அவசர நிலை
அல்ல என்கிறார் ஜேர்மனிய தூதர்

நாடு முழுவதும் ஊரடங்கு விரிவு

சிறிலங்காவில் அவசர காலச் சட்டத்தை
அமுல் செய்த கையோடு நாடு முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அரசு
அறிவித்திருக்கிறது. ஆயுதம் தாங்கிய
இராணுவத்தினர் நாடெங்கும் பாதுகாப்
புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு போர்க் காலத்தில் கூட இருந்திராத அளவில் பெரும் பொருளாதார நெருக்க
டியில் சிக்கியிருக்கிறது. வெளிநாட்டு
நாணய வங்குரோத்து நிலையும் பண
வீக்கமும் அத்தியாவசிய உணவு, மருந்து பொருள்களது தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் ஏற்படுத்தியுள்ளன. மின் தடையால் நாடு முழுவதும் இருளில் மூழ்கி வருகிறது. நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக வீதிப் போராட்டங்களைத் தொடக்
கியுள்ளனர்.

சிறிலங்காவில் அவசர காலச் சட்டம்
நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து
ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரி
வித்துள்ளது.

அமைதி வழியில் சுதந்திரமாக ஒன்று
கூடுதல் உட்பட கருத்துச் சுதந்திரம்
போன்ற சகல குடிமக்களுக்குமான ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்
குமாறு அது இலங்கை அரச அதிகாரி
களை வலியுறுத்தியுள்ளது.

“இலங்கை மக்களுக்கு இது மிகச் சவா
லான காலம். ஐரோப்பிய ஒன்றிய நாடு
கள் நிலைமையை மிக உன்னிப்பாக
அவதானித்து வருகின்றன” – என்று ஒன்
றியம் விடுத்த செய்திப் பதிவு ஒன்றில்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, கொழும்பில் உள்ள ஜேர் மனியத் தூதர் அவசரகாலச் சட்டம் அமு
லுக்கு வந்திருப்பதைக் குறிப்பிட்டு வெளியிட்ட ருவீற்றர் பதிவு ஒன்றில்,
” மக்கள் வீதிகளில் இறங்குவது அவசர
நிலைமை(emergency) அல்ல. அவசர
நிலைப் பிரகடனம் அவர்கள் மேலும்
வீதிக்கு வரவே வழிவகுக்கும்.காரணத்
தையும் விளைவுகளையும் கணக்கில்
எடுங்கள்” – என்று எழுதியிருக்கிறார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர்
ஜூலி ஷூங் (Julie Chung)”இலங்கை மக்கள் அமைதி வழிகளில் எதிர்ப்பை
வெளிப்படுத்தும் உரிமை உடையவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு உடனடி உதவியாக 40 ஆயிரம் மெற்றிக் தொன்
டீசலைக் கடனுக்கு வழங்குவதாகப் புது
டில்லி தெரிவித்துள்ளது. அதேசமயம்
இந்திய வர்த்தகர்களால் வழங்கப்பட்ட
40 ஆயிரம் தொன் அரிசியையும் இந்தி
யா கொழும்புக்கு வழங்குகிறது. இதற்
கிடையில் இலங்கையில் தோன்றியுள்ள
அமைதியின்மையை அடுத்து இந்தியப்
படைகள் அங்கு அனுப்பப்படவுள்ளன
என்று பகிரப்படும் தகவல்களை கொழும்
பில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்
ளது.
(படம் :நன்றி ஏஎப்பி)

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net