கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் புகையிரத விபத்தில் உயிரிழப்பு!

கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தெஹிவளை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டு கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த எஸ்.என். நிபோஜன், பல அச்சுறுத்தல்கள் மத்தியிலும் கிளிநொச்சியில் இருந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள். காணி விடுவிப்பு போராட்டங்கள் , மீள் குடியேறுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர். முகடு இணையத்தள செய்தியாளராகவும் பணிசெய்தவர்.

சிறந்த புகைப்பட கலைஞனாக புகைப்பட ஊடகவியலாளனாக பல கதை சொல்லும் புகைப்படங்களை செய்தி அறிக்கைகள் ஊடாக வெளிக்கொணர்ந்தவர்.

Copyright © 6999 Mukadu · All rights reserved · designed by Speed IT net