
பாரிஸ் ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிஸில் “ஆழிக்கிழிஞ்சல”
முற்குறிப்பு
“இரத்தக்காட்சிகள் கொடூர கொலைகள் வெளிப்படையாக காட்டும்பொழுது வயது எல்லையை குறிப்பிட்டு பார்வையாளர்களை உள்வாங்குங்கள் ஆழிக்கிழிஞ்சல் திரைப்படம் குழந்தைகள் மனவளம் குன்றியவர் கற்பிணிப்பெண்கள் முதியவர் பார்க்க தடையான படமே“
குற்ற விசாரனை திகில் படம் எடுக்கும்போது, பெரும்பாலான தமிழ் திரைப்பட இயக்குணர்கள் அதின் வெளிப்புற நரம்பை மட்டும்
தொடுகின்றனர் பயம் வருகிறதா? இசை வேலை செய்கிறதா? முடிவில் திருப்பம் இருக்கிறதா வென்று.
ஆனால் அந்த வெளிப்புறத்தின் அடியில் நேரடியான விடையங்களை தாண்டி ஒரு மெல்லிய உள்அதிர்வலை இருக்கிறது.அதைப் பெரும்பாலான இயக்குணர்கள் கவனிக்க தவறி விடுகின்றார்கள் திகில் என்பது இரத்தமும் கொடுறமான ஆயுதப்பயன்பாடும் கொண்ட வெறும் காட்சியல்ல, அது ஒரு மனஅழுத்தத்தின் அரசியல். அது யாரை பயமுறுத்துகிறது என்பதே அதன் நெறி. அது படைப்பின் தாக்கத்தால் ஒடுக்கப்பட்ட நினைவுகளின் துடிப்பு.
ஒலியும் அமைதியும் திகிலின் இரு முகங்கள்.
சில நேரங்களில் குரல் இல்லாமையே அதிகமான சத்தமாகி விடுகிறது.அந்த அமைதி ஒரு ஒடுக்கப்பட்ட உணர்வை தூண்டும் உண்மையின் தன்னிச்சை மொழி.
அந்த அமைதியை உருவாக்கத்தெரிந்தால் , திகில் திரைப்படம் பேசத் தொடங்கும்.
குற்றவிசாரணை திகிலில் திரைப்படங்களில் நேரம் ஒரு மறைமுகக் கதாபாத்திரமாக இயங்கவேண்டும்
அது சில நேரங்களில் மெல்ல நகரவேண்டும், சில சமயம் நின்றுவிடவும் வேண்டும்.
அந்த நின்ற நொடியில் தான் பார்வையாளன் தன் மூச்சை அடக்கிக்கொள்கிறான் உணர்சியின் உச்சத்திற்கு போகின்றான். அது மனஅழுத்தத்தின் அளவாக பார்வையாளனுக்குள் வியாபிக்கின்றது குற்றவிசாரனை திகிலின் மர்மம் ஒரு நெறிவினாவும் கூட.
பார்வையாளன் பயத்தை அனுபவிக்கின்றானா அல்லது அதை நுகர்கின்றானா?
ஒரு படம் திகிலூட்டுவது மட்டுமல்ல,
அது பயம் உண்டாக்கும் பொறுப்பையும் சுமக்கிறது.
ஏனெனில் ஒவ்வொரு பயத்திற்கும் அதன் பின்னால் ஒரு மௌனமான மனித மன வரலாறு இருக்கிறது.
உண்மையான குற்ற விசாரனைதிகில் படம் வெளியில் நிகழ்வதல்ல,படம்பார்பதனுடாக
அது பார்வையாணன் உள்மன காட்சியகத்தில் நிகழவேண்டும் அந்த நிழல்கள், அந்த மூச்சுகள்,
அனைத்தும் மனதின் மறைந்த கோப்புகளைத் திறக்கவேண்டும்.
2025 நவம்பர் 9ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு, பிரான்ஸ் ஈழத் தமிழர் திரைப்பட சங்கத்தின் திரை வெளியீடாக “ஆழிக்கிளிஞ்சல்” (குற்ற விசாரனை திகில் படம் திரைப்படம்) பிரான்ஸில் உள்ள MEGARAMA CINEMA (4 avenue de la Longue Bertrane, 92390 Villeneuve-La-Garenne) திரையரங்கில் நூறு முதல் நூற்று இருபது வரை உள்ள பார்வையாளர்கள் முன்னிலையில் திரையிடப்பட்டது.
“ஆழிக்கிளிஞ்சல்” திரைப்படம் பெண் தலைமைப் பாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குற்றவிசாரணைத் திகில் திரைப்படமாகும். திரைப்பட விளம்பரக் குறிப்பில் “எழுத்தோட்டத்தில் ஈழ சினிமா கனவுகளை நிறைவேற்றும் முயற்சி”என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
ஈழச் சினிமாவின் வரலாற்றில் இத்தகைய “கனவு நிறைவேற்றும் முயற்சி” என்ற குறிப்பு ஏன் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது என்பது ஒரு கேள்வியாகும்.
இது பார்வையாளர்களின் குற்றமா? அல்லது படைப்பாளர்களின் படைப்பாற்றல் மற்றும் வீரியமின்மையா? ஆனால் ஆழிக்கிளிஞ்சல் திரைப்படக்குழு இத்தேடலை நெருங்கியவர்களாகவள காணப்பட்டார்கள்.
குற்றவிசாரணைத் திகில் திரைப்படங்களில், ஒவ்வொரு கணத்திலும் பார்வையாளர்களின் ஊகங்களை சிதைத்து, முடிவுவரை அவர்களை சுவாரஸ்யத்துடன் இழுத்துச் செல்ல வேண்டும்.
ஆனால் “ஆழிக்கிளிஞ்சல்” திரைப்படம் விசாரணைத் திகிலைக் கதைக்குள் வைத்திருந்தாலும், ஆரம்ப நிகழ்வுகளில் குற்றவாளி யார் என்பது முன்னரே காட்டப்படுவதால், பார்வையாளர்களின் ஈர்ப்பு சற்று பாதிக்கப்படுகிறது.
இன்றைய சூழலில், ஈழச் சினிமா தயாரிப்பில் இந்தியத் தமிழ்சினிமாவின் தாக்கமின்றி தனக்கென ஒரு பாணியை உருவாக்குவது கடினம்.
சமகாலத்தில் “வர்த்தக சினிமா” என்ற பெயரில் பல தமிழ் திரைப்படங்கள் உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் வினோத் அவற்றைத் தாண்டி “ஆழிக்கிளிஞ்சல்”-ஐ ஒரு ஈழத் தமிழ்சினிமாவாக வடிவமைத்துள்ளார்.
அது சாதாரண பார்வையாளரும் ஆர்வத்துடன் பார்கக்கூடிய, நல்ல சினிமா முயற்சியாக இருக்கிறது.
ஈழச் சினிமாவின் வளர்ச்சியை உணர வேண்டுமானால், அதை பார்வையிடும் அனுபவம் மூலமே புரிந்துகொள்ள முடியும்.
“ஆழிக்கிளிஞ்சல்” திரைப்படம், குற்றவிசாரணைத் திகில் வகையில் கதையை முன்னேற்றும் ஒரு முயற்சி , ஈழத் தமிழ்சினிமாவின் தனித்துவமான கலை முயற்சியாகவும் பார்க்கக்கூடியது.
வாழ்த்துகள் படக்குழுவுக்கு 👏🏿👏🏿
09-11-2025
ப.பார்தீ

