கனடாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, பண மோசடி!

கனடாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, பண மோசடி!

கனடாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, பண மோசடி செய்து வந்த பொண்ணொருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடுவலை – நவகமுவ பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இந்த பெண் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

47 வயதான இந்த பெண் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் 51 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 26 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 72 கடவுச்சீட்டுக்கள், 50 வங்கி வைப்பு புத்தகங்கள், 50 ஏ.டி.எம் அட்டைகள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net