பெண் ஒருவர் கல்லால் அடித்து கொலை!

பெண் ஒருவர் கல்லால் அடித்து கொலை!

வீரகெடிய, ஹகுருவெல பகுதியில் பெண் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

வாய்த்தர்க்கத்தின் காரணமாக குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹகுருவெல, போகமுவ பகுதியை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வீரகெடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 9267 Mukadu · All rights reserved · designed by Speed IT net