ஜெர்மனியில் காந்தி சிலை திறப்பு!

ஜெர்மனியில் காந்தி சிலை திறப்பு!

மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜெர்மனியில் ஆங்குஸ்டா விக்டோரியா என்ற பழமையான பாடசாலைக்கட்டடத்தில் காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதனைமுன்னிட்டு ஜெர்மனியில் காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டிற்கான இந்திய தூதர் முக்தா தத்தா தோமர் முன்னிலையில், டிரையர் மாநகர மேயர் ஒல்ப்ரம் லேபே சிலையை திறந்து வைத்தார்.

மேலும், விழாவில் பங்கேற்ற முன்னாள் மேயர் கிளாஸ் ஜேன்சன், காந்தியின் தத்துவங்களை நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2802 Mukadu · All rights reserved · designed by Speed IT net