சட்டப்படி அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு ஜப்பான் வரவேற்பு

சட்டப்படி அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு ஜப்பான் வரவேற்பு

இலங்கையுடன் நீண்ட காலமாக நட்புறவைக் கொண்டுள்ள நாடென்ற வகையில் ஜப்பான் , சட்டத்திற்கு அமைவான முறையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை உட்பட இலங்கையில் அரசியல் ஸ்திரநிலையை நோக்கிய அண்மைய முன்னேற்றங்களை வரவேற்பதாக இலங்கைக்கான ஜப்பானியத்தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பங்களிப்புச் செய்த அனைத்து தரப்பினரையும் பாராட்டுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

இலங்கையிலும் இந்து-பசுபிக் பிராந்தியத்திலும் சமாதானம் இ ஸ்திரநிலைமை மற்றும் சுபீட்சத்தை அடைவதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஜப்பான் ‘விரிவான கூட்டுப்பங்காண்மை’யை மேலும் வலுப்படுத்த தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net