எரிபொருள் விலைச் சூத்திரம் மீண்டும் நாளை சமர்ப்பிப்பு

எரிபொருள் விலைச் சூத்திரம் மீண்டும் நாளை சமர்ப்பிப்பு

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தும் விலைச் சூத்திரம் மீண்டும் நாளை (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு அமைவாக எமது நாட்டிலும் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கிணங்க எரிபொருள் விலைச் சூத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை தொடர்பில் நாட்டில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் நாளை நாடாளுமன்றில் எரிபொருள் விலையில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net