எதிர்கட்சித் தலைவராக மாறிய மைத்திரி?

எதிர்கட்சித் தலைவராக மாறிய மைத்திரி?

கடந்த மாதங்களில் இரண்டு பிரதமர்களை கொண்ட நாடாளுமன்றமாக இருந்த நாடாளுமன்றம் தற்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை கொண்டதாக மாறியுள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,

நாங்கள் முன்னைய நாட்களில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தோம், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக மாறினோம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனோம், பிறகு நியூட்டல் என சொல்லப்படுகின்ற ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினராக மாறினோம் தற்போது மீண்டும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக மாறியுள்ளோம்.

இந்த கால சூழ்நிலையில் கடந்த மாதம் இரண்டு பிரதமர்களை கொண்டிருந்த நாடாளுமன்றமானது தற்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை கொண்டதாக மாறியுள்ளது.

எனினும் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் இருந்தாலும் கூட எதிர்க்கட்சித் தலைவரின் வகிபாகத்தை சபையிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வகிக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net