இந்தோனேசிய ஆழிப்பேரலை: இதுவரை 222 பேர் உயிரிழப்பு : 843 பேர் காயம்!

இந்தோனேசிய ஆழிப்பேரலை: இதுவரை 222 பேர் உயிரிழப்பு : 843 பேர் காயம்!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை அடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த அனர்த்தத்தில் இதுவரை 843 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 28 பேரை காணவில்லை என்றும் இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ பூர்வோ நகுரோ தெரிவித்துள்ளார்.

(சனிக்கிழமை) 9.30 மணியளவில் தாக்கிய இந்த சுனாமியினால், குடியிருப்புகள், கட்டடங்கள் மற்றும் வீதிகள் சேதமடைந்துள்ளதோடு, பெருமளவு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 8898 Mukadu · All rights reserved · designed by Speed IT net