மத்தல விமான நிலையத்தில் காலை விமானம் ஒன்றில் தீ!
மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை விமானம் ஒன்றில் தீப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
CVK 7042 என்ற சரக்கு விமானம் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த விமான நேற்று மாலை தாய்லாந்தில் இருந்து மத்தல விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

இன்று காலை ஓமானை நோக்கி பறக்க தயாரான போது இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீப்பற்றிய போது விமானத்திற்குள் 7 பேர் இருந்துள்ளனர். அவர்களில் எருவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் விமான நிலைய தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
எனினும் தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.