அமைச்சரவை வர்த்தமானியில் காலதாமதம்!
அண்மையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட புதிய அமைச்சரவையின் பொறுப்புக்களுக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட இன்னும் காலம் செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த வாரத்தில் வர்த்தமானி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அது காலதாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரே இதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.