ஒரு மாதத்திற்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்!

ஒரு மாதத்திற்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்!

ஒரு மாத காலத்திற்குள் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டால் தான் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.

ஆடிகம, சியம்பலாவெவ பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்விலேயே அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்ட திருப்புமுனைக்கு காரணம் தான் என்ற போதிலும் தனக்கு எவ்வித அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை நியமிக்கப்பட்டு சில வாரங்கள் ஆகியுள்ள போதிலும் தனக்கு அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Copyright © 4490 Mukadu · All rights reserved · designed by Speed IT net