பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரும் 07 நாட்களுக்கு தடுத்து வைப்பு

பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரும் 07 நாட்களுக்கு தடுத்து வைப்பு

தெஹிவளை, அத்திடிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரையும் 07 நாட்கள் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இந்த அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இலங்கை வரலாற்றிலேயே மிகப்பாரியளவிலான ஹெரோயின் போதைப் பொருளுடன் கடந்த 31ம் திகதி இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது இவர்களிடமிருந்து சுமார் 278 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Copyright © 6686 Mukadu · All rights reserved · designed by Speed IT net