கடன்பொறிக்குள் இலங்கை!

கடன்பொறிக்குள் இலங்கை!

இந்த வருடத்தில் 5.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநரான பேராசிரியர், இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் நேர்ந்த பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் இன்னும் கணக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், இந்த குழப்பத்தினால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிந்தனை மற்றும் நம்பிக்கை ஊடாக கணக்கிட முடியாதுள்ளது.

அத்தோடு, வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் யாதார்த்தமாக செயற்பட வேண்டும். கடன் மதிப்பீடு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படவுள்ளோம்“ என குறிப்பிட்டார்.

Copyright © 9709 Mukadu · All rights reserved · designed by Speed IT net