வானில் நடனமாடும் பறவைகள்

வானில் நடனமாடும் பறவைகள்

இஸ்ரேல் வானில் குடிபெயரும் பறவைகள் நிகழ்த்திய வினோத காட்சி மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.பறவைகளால் இத்தனை அழகாக நடனமாட முடியுமா என்று எண்ணத் தோன்றுகிறது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் இரவு வானில் பறந்த பல நூற்றுக்கணக்கான பறவைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின.

ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்த இந்த பறவைகள் தெற்கு இஸ்ரேலிய வானில் இத்தகைய வினோத காட்சியை உருவாக்கியிருந்தன.

சாதாரணமாகவே கூட்டமாக பறந்துவந்த இந்த பறவைகள் திடிரென தமது போக்கை மாற்றி மாற்றி பறக்க ஆரம்பித்தன.

அவ்வாறு அவை கோணத்தை மாற்றி மாற்றி பறக்கும் போது அதன் தோற்றம் காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

மீனைப் போன்று, திமிங்கிலம் போன்று, பெரிய பந்து போன்று என அவற்றின் வடிவங்கள் அமைந்திருந்தன.

இவ்வாறிருக்கையில், இந்த பறவைகள் தம்மை வேட்டையாடும், பெரிய பறவைகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இவ்வாறு மாற்றி பறப்பது வழக்கம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Copyright © 1216 Mukadu · All rights reserved · designed by Speed IT net