எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியாக போட்டியிடுவோம் !

எதிர்வரும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் ஒரு பரந்த கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கு எண்ணம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியும் இந்த கூட்டணியில் உள்ளடங்கியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். நேற்றையதினம் (வௌ்ளிக்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்கட்சித் தலைவர் தனது புத்தாண்டு பணிகளை தனிப்பட்ட காரியாலயத்தில் ஆரம்பித்து வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன்போது சில பௌத்த மத குருமார்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளையும் நடத்திவைத்தனர்.
இதேவேளை, நேற்றையதினம் சர்வதேச ஆணழகர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை வீரர் லூசியன் புஷ்பராஜ், எதிர்கட்சித்தலைவரை அவரது தனிப்பட்ட அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.