மஹிந்தவை சந்தித்தார் லூசியன் புஷ்பராஜ்

மஹிந்தவை சந்தித்தார் லூசியன் புஷ்பராஜ்

உலக ஆணழகர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற லூசியன் புஷ்பராஜ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன முன்னணியின் அலுவலகத்திலேயே லூசியன் புஷ்பராஜ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷ

உலக ஆணழகர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற லூசியன் புஷ்பராஜை சந்தித்தமை மகிழ்ச்சியளிக்கின்றது.

இவர் எமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் தொடர்பில் நாம் பெருமிதமடைகின்றேன். எதிர்காலத்தில் இவர் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.

அண்மையில் தாய்லாந்தில் உலக உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது உலக சம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இதன்போது , 100 கிலோகிராம் எடைக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் பங்கேற்ற லூசியன் புஷ்பராஜ் உலக கட்டழகராக தெரிவாகி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 1207 Mukadu · All rights reserved · designed by Speed IT net