ஒஸ்லோ நகரின் பிரதி மேயரான ஈழத்தமிழ் பெண்ணை சந்தித்தார் மைத்திரி!

ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்சாயினி குணரத்னம் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கம்சாயினி குணரத்னம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், தனது விஜயத்தின் ஒரு அங்கமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கம்சாயினி குணரத்னம் நேற்று சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.