ஆளுங்கட்சி ஆசனத்தை விரைவில் கைப்பற்றுவோம்!

ஆளுங்கட்சி ஆசனத்தை விரைவில் கைப்பற்றுவோம்!

எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தாம் விரைவில் ஆளுங்கட்சி ஆசனத்தையும் கைப்பற்றுவோமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“நாட்டை ஆட்சி செய்யும் தற்போதைய அரசாங்கம், மக்களுக்காக சேவையாற்றுவதை காட்டிலும் பதவியாசை கொண்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.

இதேவேளை நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாடுகளுக்கே அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. ஆனாலும், நாம் ஒருபோதும் அதற்கு இடமளிக்கமாட்டோம்.

மேலும், நாட்டு மக்களும் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற நிலையில் உள்ளதுடன் எங்களது மீதே அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஆகையால், தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்தினால், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பது உறுதி” என நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Copyright © 8022 Mukadu · All rights reserved · designed by Speed IT net