அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டது ஜப்பான் பாதுகாப்பு கப்பல்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டது ஜப்பான் பாதுகாப்பு கப்பல்!

இலங்கைக்கு நல்லெண்ண விஜயமாக வந்துள்ள ஜப்பான் கடல்சார்ந்த சுய பாதுகாப்பு படை கப்பலான ‘இக்கசுச்சி’ அம்பாந்தோட்டையில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பலின் வருகையை இலங்கை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப இன்று வரவேற்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் கடைப்படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்விலும் அவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் பிரதிக் கட்டளைத் தளபதி, ரஞ்சித் பிரேமரத்ன மற்றும் இலங்கையின் ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்புச் செயலாளர் கப்டன் அட்சுஹிரோ மோரோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கடற்படை குழுவினர் பிரபலமான சுற்றுலா தளங்களை பார்வையிடல், இரு படைகள் இடையேயான கூட்டுப்பயிற்சி மற்றும் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net