சிறுவன் செய்த காரியத்துக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

சிறுவன் செய்த காரியத்துக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

மலேசியாவில் சொந்த சகோதரியை அவரது சகோதரனே தாய்மையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்காரணமாக 14 வயது சிறுவனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தனது சகோதரி என்றும் பாராமல் அவரிடம் அத்துமீறியுள்ளான்.

இதன் விளைவாக அவர் கர்ப்பமாகியுள்ளார். இந்த விடயம் அவர்களின் பெற்றோருக்குத் தெரியாது.

இந்நிலையில் சமீபத்தில் குறித்த பெண் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்கள் மகன் மீது பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

சிறுவனைக் கைதுசெய்து பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுவனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Copyright © 2403 Mukadu · All rights reserved · designed by Speed IT net