அனைத்து வாகனங்களுக்கும் காபன் வரி!

இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொண்டு வரப்பட்ட காபன் வரி அனைத்து வாகனங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் வாகன வருமான அனுமதிப் பத்திரமானது புதுப்பிக்கப்படும் போது இந்த வரி அறவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனம் பதிவு செய்யும் ஆண்டில் இந்த வரியை செலுத்த வேண்டியது இல்லை எனவும் தெரியவருகிறது.
இந்த விடயத்தை நிதி அமைச்சு தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரச வாகனங்கள் இந்த காபன் வரியை செலுத்த வேண்டியதில்லை என செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே மேற்படி விடயத்தை நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.