அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலரி தெரிவு

Hilary_CIஅமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளின்ரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹிலாரி கிளின்ரன் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஜனாதிபதி பரக் ஒபாமாவின் முதல் தவணைக் காலத்தில் ராஜாங்கச் செயலாளராகவும் ஹிலாரி கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கிளின்ரன் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார். தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக ஹிலாரி கிளின்ரன் தெரிவித்துள்ளார்.

Copyright © 4861 Mukadu · All rights reserved · designed by Speed IT net