சந்திரிகா காலாவதியான உணவுப் பொருளுக்கு ஒப்பானவர்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவரென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
“சுவையான உணவுப் பொருளொன்று காலாவதியான பின்னர் சிறிது காலத்திற்கு காட்சிப்பொருளாக சந்தையில் வைத்திருப்பார்கள். ஆனால் அதற்கு பெறுமதியிருக்காது.
அத்தகையதொரு நிலைமையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் சந்திரிகாவும் தற்போது காணப்படுகின்றார். மேலும், அவரால் எந்ததொரு பெறுமதியும் யாருக்கும் இல்லை என்பதே உண்மை.
இதனால் நாட்டை வேறு நாடுகளுக்கு தாரைவார்க்கும் செயற்பாட்டிலிருந்து சந்திரிகா ஒதுங்கிகொள்ள வேண்டும்” என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.