கிழக்கு லண்டனில் பொலிஸ் கார் மோதி 21 வயது யுவதி மரணம்!

கிழக்கு லண்டனில் பொலிஸ் கார் மோதி 21 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நேற்று இரவு 11.45 மணியளவில் கிழக்கு லண்டன் வோல்த்ஹம்ஸ்டோ பகுதியில் அவசர அழைப்பு ஒன்றை கையாள்வதற்கு சென்று கொண்டிருந்த பொலிஸாரின் வாகனம் மோதியதாலேயே இந்த பெண் உயிரிழந்துள்ளார்.

விபத்தையடுத்து பொலிஸ் வாகனத்தில் பயணித்த பொலிஸார் விபத்துக்குள்ளான பெண்ணுக்கு அவசர சிகிச்சை குழுவினர் வருவதற்கு முன்னர் முதலுதவி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் கடுமையான முயற்சிகள் பலனளிக்காதநிலையில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Copyright © 5898 Mukadu · All rights reserved · designed by Speed IT net