Collingwood பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் உயிரிழப்பு!

Collingwood பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் உயிரிழப்பு!

கனடாவின் Collingwood பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் இருந்தவர்களினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது வீட்டிற்கு வெளியே பனியில் உறைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பிராந்திய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்காலம் என பிராந்திய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net