ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம்!
மாகாணசபை தேர்தலை நடத்தாது இழுத்தடித்து மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றதென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் வரையில் வேறு எந்த தேர்தலையும் நடத்தாது காலம் கடத்தவே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என்றார்.
பாராளுமன்றத்தில் இன்று மாகாண சபைகள் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற சபை ஒத்தி வைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதன்போது மேலும் தெரிவிக்கையில்,
இதேவேளை ஊடகமொன்றில் ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்த வேண்டுமென அரசாங்கம் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதன்படி ஜனாதிபதி தேர்தல் வரை வேறு எந்த தேர்தலையும் நடத்தாது இருப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது.