ஜனாதிபதி மைத்திரி தாய்லாந்து விஜயம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
புதிய அரசாங்கம் பதவியேற்றபின்னர், ஜனாதிபதி மைத்திரி அடுத்தடுத்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார்.
முன்னதாக பிலிப்பைன்ஸூக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரி, அதன் பின்னர் சிங்கப்பூருக்கு விஜயம் செய்தார்.
சிங்கப்பூர் விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (சனிக்கிழமை) காலை நாடுதிரும்பியுள்ளார்.
இந்நிலையில், அடுத்ததாக தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத் தரப்பின் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்துவரும் ஜனாதிபதி மைத்திரி, வெளிநாடுகளுக்குச் சென்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றார்.
குறிப்பாக சிங்கப்பூர் விஜயத்தின்போது, சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டத்தில் தமது தரப்பில் தவறு இடம்பெற்றுள்ளதென தெரிவித்திருந்தமை முக்கிய விடயமாகும்.
அதுமட்டுமன்றி, ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்வும் நெருங்கி வருகின்றது. இவ்வாறான பின்புலத்தில் ஜனாதிபதி அடிக்கடி வெளிநாடுகளுக்கு விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.