குழந்தையைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை!
கொட்டகலை ரொசிட்டா பகுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தாயொருவரின் சடலத்தையும், கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட அவரது 7 மாத குழந்தையைின் சடலத்தையும் கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரின் சடலத்தையும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
வீட்டிற்கு வெளியில் கொய்யாப்பழ மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கே.நித்தியகல்யாணி (26 வயது) மற்றும் அவரது 7 மாத ஆண் குழந்தையான சி.சந்தீப் அஷ்விந்தன் ஆகியோரது சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த பெண் தனது குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா எனும் பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் ஹற்றன் நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகள் மேற்கொண்டதன் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.






