இலங்கை ரூபாயின் பெறுமதியின் திடீரென ஏற்பட்ட வளர்ச்சி!
அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவான நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த வாரத்தில் இந்த வளர்ச்சியை காண முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய நேற்று முன்தினம் இலங்கை ரூபாயின் பெறுமதி 183.57 ரூபாயாக பதிவாகியுள்ளது.
ரூபாயின் பெறுமதி கடந்த வாரத்தினுள் நூற்றுக்கு 16 வீதம் வீழ்ச்சியடைந்த நிலையில் ஆசியாவின் பலவீனமான நாயணமாக இலங்கை ரூபாய் பதிவாகியது.
எப்படியிருப்பினும் இந்த வருடத்தினுள் ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 0.5 வீதம் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.