வெளிநாட்டு பயணங்களில் மோடியை மிஞ்சுவாரா மைத்திரி?

வெளிநாட்டு பயணங்களில் மோடியை மிஞ்சுவாரா மைத்திரி?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 41 மாதங்களில் 34 உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம், இருதரப்பு உடன்படிக்கைகள், நிதி மற்றும் வேலைவாய்ப்புக்கள் எனப் பல்வேறுபட்ட பேச்சுக்களை இந்த விஜயத்தின் போது அவர் நடத்தியுள்ளார்.

அந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இந்த வருடத்தின் ஆரம்பம் வரை இதுவரை 34 உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இதில் 2015 இல் – 10, 2016 இல் – 12, 2017 இல் – 7, கடந்த வருடமும் இந்த வருட ஆரம்பத்திலும் என சேர்த்து 34 உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு அடுத்த மாதம் தாய்லாந்திற்கான விஜயத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த நான்கரை ஆண்டுகளாக (2018 டிசம்பர் மாதம் வரை) இந்திய பிரதமர் நரேந்திர மோடி 84 உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பதுடன் 920 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதற்காக செலவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 3996 Mukadu · All rights reserved · designed by Speed IT net