சிறப்புரிமையை காட்டி யாரும் தப்பிக்க முடியாது!

சிறப்புரிமையை காட்டி யாரும் தப்பிக்க முடியாது!

நாடாளுமன்ற சிறப்புரிமையானது அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுவானது. அமைச்சர்கள் என்பதால் அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க முடியாதென சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஹொரவப்பொத்தானை தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதுள்ள அமைச்சர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழும்போது அவர்கள் பக்கத்தில் நியாயம் காணப்படுமாக இருந்தால் அவர்களை பாதுகாக்க வேண்டியது சபை முதல்வரின் கடமையாகும்.

சில குற்றச்சாட்டுக்கள் சி.ஐ.டிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தில் யாரும் கொலை செய்யப்பட்டிருந்தால் அதனை மூடி மறைக்க முடியாது.

அந்தவகையில், நாடாளுமன்றத்திலுள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net