இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும்.

இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும்.

இந்து மக்களின் இதயங்களில் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிவபெருமானுக்கு உரிய நாளான மஹா சிவராத்திரி விரதப் பூஜைகள் இன்று (திங்கட்கிழமை) உலகளாவிய ரீதியிலுள்ள இந்து மக்களால் புனிதமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், சிவராத்திரி தினத்தில் ஏற்றப்படும் தீப ஒளியினால் உலகத்தின் இருள் நீங்குவதைப்போன்றே, உலக வாழ் இந்து மக்களின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பெற்று வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Copyright © 2534 Mukadu · All rights reserved · designed by Speed IT net