நெல் விலை அதிகரிப்பு – அமைச்சர் பீ. ஹரிசன்
சிறுபோகத்திலிருந்து, நெல் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, விவசாய, கிராமிய பொருளாதாரம் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாடு நெல் கிலோ ஒன்றின் விலை 40 ரூபாயாகவும், சம்பா நெல் கிலோ ஒன்றின் விலை 43 ரூபாயாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏப்ரல் மாதம் முதல், அரிசி விலையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார்.