அமெரிக்க ஊடகத்தில் மகளிர் தினத்தில் முதன்மையான கண்ணிவெடியகற்றும் ஈழ மங்கைகள்.
சர்வதேச மகளிர் தினமான நேற்று அமெரிக்க ஊடகமொன்றில் ஈழத்தில் கண்ணிவெடியகற்றும் பணியில் பல்வேறு துயர்களின் பின்னணியில் மத்தியில் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஈடுபடும் மகளிரின் படங்கள் முதன்மைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதை பல்வேறு ஊடகங்கள் இன்று முதன்மைப்டுத்தியுள்ளன.
2009ம் ஆண்டு போர் முடிந்த பின்பு பொருளாதார பின்நிலைக்கு தள்ளப்பட்டும் தங்கள் குடும்ப தலைவரை போரில் இழந்தும் குடும்ப தலைமையை தம் தோளில் முழுமையாக சுமக்கும் பெண்களில் ஒரு பகுதியினர் போரில் போது விதைக்கப்பட்ட மிகவும் ஆபத்தாக வெடிபொருட்கள் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.
எப்போதும் உயிருக்கு உத்தரவாதமற்ற இந்தப்பணியில் பல நூற்றுக்கணக்கான ஈழப்பெண்கள் ஈடுபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.